ajjj

Advertisment

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் - சிவா இணையும் நான்காவது படமான விஸ்வாசம் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதால் தற்போது இதன் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். டி இமான் முதல்முறையாக அஜித்துடன் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அஜித் துப்பாக்கி சுடும் புகைப்படம் ஒன்று சமூக தளங்களில் வெளியாகி உள்ளது. விஸ்வாசம் படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் கேங்ஸ்டர் பற்றிய கதையாகவும் இருக்குமோ என்று எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.