அஜித்தின் 'துணிவு' - புது அப்டேட் வெளியீடு

ajith thunivu new update released

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும் படத்தின் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளைமுன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

'துணிவு' படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எச்.வினோத் டப்பிங் ஸ்டூடியோவில் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிபலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ACTOR AJITHKUMAR Thunivu
இதையும் படியுங்கள்
Subscribe