Advertisment

சுயவழி நடந்து சரித்திரம் படைக்கும் அஜித்

ajith thunivu gansta song crossed 3 million views

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' மற்றும் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'கேங்ஸ்டா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் கதை, வங்கியைக் கொள்ளையடிப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது எனக் கூறப்பட்ட நிலையில் 'கேங்ஸ்டா' பாடலைப் பார்க்கும் போது அஜித் ஒரு கேங்ஸ்டராக வருவது போல் தெரிகிறது.

Advertisment

யூடியூபில் வெளியான இப்பாடல் தற்போது வரை 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் வரும் "சுயவழி நடப்பவன் சரித்திரம் படைப்பவன்" என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் இசையமைப்பாளர் ஜிப்ரானின் 50வது படம் என்பது நினைவுகூரத்தக்கது.

ACTOR AJITHKUMAR ghibran h.vinoth Thunivu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe