ajith in thunivu first singil update

Advertisment

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும், இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சஷன் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலையும் மஞ்சுவாரியர் ஒரு பாடலையும் பாடியுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 9ஆம் (09.12.2022) தேதி 'சில்லா சில்லா' பாடல் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் பாடலின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அஜித் படத்திற்கு அனிருத் பாடியுள்ள 'ஆலுமா டோலுமா', 'சர்வைவா' உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் இந்தப் பாடலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.