Skip to main content

ஆசிரியர் ஆன அஜித்!!!

Published on 04/05/2018 | Edited on 07/05/2018

நடிகர் அஜித்குமார் சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று பார்த்தால் திடீரென்று ஆசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார். சற்று குழப்பமாக இருக்கிறதா? அஜித் பைக் ரேசர், கார் ரேசர், நல்ல குக், போட்டோகிராஃபர் என்று பன்முகத் திறன்கொண்டவர். சில ஆண்டுகளாகவே சிறிய ரக விமானங்கள் செய்து அதனை பறக்க விடுவது என்று  ஏரோனாட்டிக்ஸ்  துறையின் மீதும் அஜித்திற்கு ஆர்வம் ஏற்பட்டு அதுபற்றி கற்றுக்கொண்டிருந்தார். 

proffesor ajith

 

தற்போது அஜித்தை அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் (MIT) ஹெலிகாப்டர் சோதனை விமானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இங்கு வந்து அஜித் வகுப்பெடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. அதனை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளாராம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்' - கிராம சபைக் கூட்டத்தில் முடிவு

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

 'Private industry affecting the environment should be closed permanently'-Village council meeting decided

 

மண்ணை மாசுபடுத்தி மக்களைப் பாதிக்கும் அளவிற்கு கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும் என ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சி வாவி காட்டு வலசு கிராமத்தில் எஸ்.பி.எம். வீவிங் மில் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சு துகள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் சுவாச கோளாறு, தோல் நோய் போன்ற பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

 

 'Private industry affecting the environment should be closed permanently'-Village council meeting decided

 

இந்த நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு கஸ்பாபேட்டை ஊராட்சியில் தலைவர் சித்ரா அர்ஜுனன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

 

பொதுமக்களின் மனுவை ஏற்று நிலத்தடி நீரை குடிநீர் ஆதாரத்தை மாசடையச் செய்யும் எஸ்பிஎம் வீவிங் தொழிற்சாலையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பொதுமக்களை பாதிக்கும் தொழிற்சாலையை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

 

Next Story

போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடியாது... மே தின வரலாறு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

g


போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடிவதில்லை. பிறந்த குழந்தை கூட பசிக்காக அழும் போது தன் முதல் போராட்டத்தைத் தொடங்குகிறது அதனை அறியாமலேயே, பின் மூன்று மாதங்களில் குப்புற விழும்போதும், நடை பயிலும் போதும் சின்னச் சின்ன கீறல்களில் அதன் போராட்டத் தழும்புகளைக் காணலாம். நாம் பிறக்கும் போதே போராட்டக் குணம் நம்மில் ஒட்டிக்கொண்டதாலோ என்னவோ உணவிற்கும் உடைக்கும் இதோ இப்போது கரானோவின் அபாயாத்திற்கும் சேர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. இன்றைய போராட்டங்கள் மனிதனோடு இல்லை, கண்ணுக்குத் தெரியாத கரானோவோடு நம்மை நெருக்கும் மனிதர்களோடு, நம் கூடவே பிறந்த அடிவயிற்றுப் பசியென்னும் அரக்கனோடு, ஒருவேளை உணவிற்காக ஜகத்தை அழிக்க வேண்டும் என்று சொல்வதற்கு நாம் என்ன பாரதியாரா அவரையே இறந்த பிறகுதானே மதித்தோம் ஆனால் காற்றும் இயற்கையும் அவனின் கிறுக்கல்களை ஓவியமாய் நமக்கு முன்பே கொண்டாடியது. 


இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம், பிரான்ஸில் ஜனநாயம் அல்லது மரணம் என்ற கோஷப் போராட்டம் எல்லாமே தோல்வியில் முடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வெற்றியும் பெற்று மைல்கல்லாக ஆனது. ரஷ்யா, அமெரிக்கா, சிகாக்கோவில் ஜூன் 1886- இல் 7 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு ஹேமார்க்கெட் படுகொலை இப்போதும் அங்கே நினைவுச்சின்னமாய் உழைப்பாளர்களின் போராட்டத்தை நமக்கு நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் தூக்கில் இடப்பட்ட தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் வேலை நேரப் போராட்டமும், சிகாககோவின் தியாகமும் தான் இன்று உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சென்னை மாநகரில்தான் முதன் முதலில் தொழிலாளர்தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான தோழர் ம. சிங்காலவேலர் 1923- இல் சென்னை அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்கள். அதன் நினைவுச் சின்னம்தான் மெரினாவின் உழைப்பாளர்கள் சிறை நாளை மீண்டும் ஒரு உதய நாளைக் கொண்டாடக் காத்திருக்கிறது. 

சென்னையில் எத்தனையோ சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை எல்லாமே மத ரீதியாகவோ அல்லது ஒரு தனி மனிதம் மற்றும் அரசியல் அபிமானத்திற்காகவோ வைக்கப்பட்டு இருக்கும். சில இதில் விதிவிலக்கு. அவைகள் பராம்பரிய முறைமையை விளக்குவதற்கு இருக்கும். இறந்து போன விலங்குகளின் சிலைகள் கூட உண்டு. எல்லாச் சிலைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சிறப்புகள் இருந்தாலும் நம் மெரினா உழைப்பாளர் சிலைக்குத் தனி சிறப்பு உள்ளது. இது ஒரு மதத்தையோ இனத்தையோ ஜாதியையோ குறிக்கவில்லை, ஒட்டுமொத்த உழைக்கும் சமுதாயத்தையே குறிக்கிறது. காலம் தொடங்கிய போதிலிருந்து முதலாளித்துவம் அதற்கு அடங்கியாளும் தொழிலாதித்துவமும் தொடங்கிவிட்டது. மே தினத்தின் வரலாறு என்னவோ 8 மணி நேர வேலையின் தொடக்கத்தை உண்டாக்குவதுதான் என்றாலும் சில நேரங்களில் அதிகமாக வேலை செய்வதற்காகப் பணத்தைக் கொடுத்து எதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினார்களோ அதையே மீண்டும் ஏற்றுக்கொள்ள வைத்தார்கள். அப்படித்தான் OT என்ற அதிகப்படியான வேலை அதேபோல் ஷிப்ட் முறையில் வேலையைச் செய்வது, நாம நம்மை அடக்குகிறார்கள் என்று எதிர்க்கிறோம் ஆனால் அதையே நாம் நம்மை அறியாமலேயே பணத்திற்கோ பிற பொருளுக்கோ அடங்கி ஏமாற்றப்பட்டு வருகிறோம் தினம் தினம். 

 

j


 

http://onelink.to/nknapp


மாதம் ஒரு நாளைய சந்தோஷம் மாதம் முழுமைக்கும் அவர்களுக்கு இருக்குமா என்பது தெரியாமலேயே இருந்தது ஆனால் திருப்தி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் உழன்று கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.  மே 1 தொழிலாளர்கள் வெற்றி நாளாய் உலகம் முழுக்க பரவ போராட்டம் தொடங்கி 33 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த லாக்டவுன் மீண்டும் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுத்தான் இருக்கிறது எதற்கு? நேரம் காலம் இல்லாமல் வேலை செய்யத் தங்களைத் தாங்களே அடிமைகளாக்கிக் கொள்ள வாழ்ந்தாக வேண்டுமே என்ற நிலையிலேயே நாளைய தொழிலாளர் தினமும் தொழிலாளிகளுக்கு வழக்கமான நாளாகவே நிறைந்திருக்கப் போகிறது.  உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!