Advertisment

"இனி என்னை தல என்று அழைக்க வேண்டாம்" - நடிகர் அஜித்

ajith talk about nick name thala

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகஇருக்கும் அஜித் தீனா, வீரம், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தீனா படத்தில் நடித்ததிலிருந்து நடிகர் அஜித்தைரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் தல என்று அழைத்து வந்தனர்.இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="31e81e55-2c13-4231-a6a0-f70806338531" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_17.jpg" />

Advertisment

இந்நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரும் மதிப்பிற்குரிய ஊடக பொதுஜன மற்றும் உண்மையான ரசிகர்களுக்கு , இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போது, குறிப்பிட்டுப் பேசும் போது, எனது இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதும். தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப்பெயர்களையோகுறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன நிறைவு, மன அமைதி உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் ஏற்கனவே ரசிகர்கள் அன்போடு அழைத்த 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை இனி அப்படிஅழைக்க வேண்டாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR valimai ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe