Advertisment

அஜித் இன்னும் நடிக்கிறாரா? - பாஜக நடிகை கிளப்பிய சர்ச்சை

isha

விஜயுடன் நெஞ்சினிலே, அரவிந்த சாமியுடன் என் சுவாசக்காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்த பாலிவுட்டை சேர்ந்த இஷா கோபிகர், 20 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டும், அஜித் இன்னும் நடிக்கிறாரா என தெரியவில்லை என்று கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Advertisment

சிவகார்த்திகேயன் குறித்து இஷா, “சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைவுக்கு வருகிறார். சிவாவின் மேனரிசத்தால் அப்படி சொல்லவில்லை. அவர் வேண்டும் என்றே ரஜினியை காப்பியடிக்கிறார் என்றும் நான் கூறவில்லை. ஆனால் சிவாவை பார்த்தால் ரஜினியின் நினைவு வருகிறது. பார்வை ஒரு வேளை சிவகார்த்திகேயனின் தலைமுடி, முகம், நிறம், பார்க்கும் பார்வையால் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அஜித் குறித்து பேசுகையில், “முன்பு அஜித்துடன் நடிக்க ஆசை பட்டேன், ஆனால் அவர் தற்போது திரைத்துறையில் நடித்து வருகிறாரா என்று தெரியவில்லை” என்றார். இதனால் இஷா கோபிகரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல ரஜினி ரசிகர்களும், சிவகார்த்திகேயனோடு ரஜினியை ஒப்பிட்டு பேசுவதா என்று விமர்சிக்கின்றனர்.

இஷா கோபிகர் கடந்த வாரத்தில்தான் மஹாராஷ்ட்ராவில் பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடந்த ஒரு விழா ஒன்றில் பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாஜகாவுக்கு பரப்புரை செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

ajith kumar isha gopikar sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe