Skip to main content

அஜித் இன்னும் நடிக்கிறாரா? - பாஜக நடிகை கிளப்பிய சர்ச்சை

Published on 04/03/2019 | Edited on 04/03/2019
isha


விஜயுடன் நெஞ்சினிலே, அரவிந்த சாமியுடன் என் சுவாசக்காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்த பாலிவுட்டை சேர்ந்த இஷா கோபிகர், 20 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
 

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டும், அஜித் இன்னும் நடிக்கிறாரா என தெரியவில்லை என்று கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
 

சிவகார்த்திகேயன் குறித்து இஷா, “சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைவுக்கு வருகிறார். சிவாவின் மேனரிசத்தால் அப்படி சொல்லவில்லை. அவர் வேண்டும் என்றே ரஜினியை காப்பியடிக்கிறார் என்றும் நான் கூறவில்லை. ஆனால் சிவாவை பார்த்தால் ரஜினியின் நினைவு வருகிறது. பார்வை ஒரு வேளை சிவகார்த்திகேயனின் தலைமுடி, முகம், நிறம், பார்க்கும் பார்வையால் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். 
 

அஜித் குறித்து பேசுகையில், “முன்பு அஜித்துடன் நடிக்க ஆசை பட்டேன், ஆனால் அவர் தற்போது திரைத்துறையில் நடித்து வருகிறாரா என்று தெரியவில்லை” என்றார். இதனால் இஷா கோபிகரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல ரஜினி ரசிகர்களும், சிவகார்த்திகேயனோடு ரஜினியை ஒப்பிட்டு பேசுவதா என்று விமர்சிக்கின்றனர்.
 

இஷா கோபிகர் கடந்த  வாரத்தில்தான் மஹாராஷ்ட்ராவில் பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடந்த ஒரு விழா ஒன்றில் பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாஜகாவுக்கு பரப்புரை செய்வார் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.