‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்... மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

ajith starring valimai movie making video update

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில்'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின்க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ இன்று (14.12.2021) மாலை வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

ACTOR AJITHKUMAR ajith valimai
இதையும் படியுங்கள்
Subscribe