ajith shocked after fan name in dubai

அஜித்குமார் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்துமுடிந்த 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்தின் 'அஜித் குமார் ரேசிங்' அணி கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தது. இதனைத்தொடர்ந்து, போர்ச்சுகலில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் அவரது அணி கலந்துகொள்கிறது. இந்தத் தொடரின் முதல் சுற்றில் 4.653 கி.மீ அளவிலான பந்தயச் சுற்றை (லேப்) 1.49.13 லேப் டைமில் நிறைவு செய்து அடுத்தச் சுற்றுக்கு அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார். கார் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிய அஜித் அது முடிந்த பின்பு தான் இந்தியா திரும்பவுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் துபாயில் அஜித் முன்பு ஒரு ரசிகர் பாட்டு பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த ரசிகர் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இருந்து ‘கண்டுகொண்டேன்’ பாடலை பாடுகிறார். அதனை ரசித்த கேட்ட அஜித் அவர் பாடி முடித்தவுடன் அவரின் பெயர் கேட்க அதற்கு அவர் அஜித் என சொல்ல சட்டென அதிர்ச்சியடைந்த அஜித் பின்பு அவரை வாழ்த்தினார்.

Advertisment

அஜித் தற்போது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தை வைத்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் 6ஆம் தேதியும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

Advertisment