Advertisment

'அண்ணன்- அண்ணி...' - நெகிழும் அஜித் ரசிகர்கள்

ajith shalini photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகஇருக்கும் அஜித் அமர்க்களம் படத்தில் தன்னுடன் நடித்த ஷாலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில்அஜித் மற்றும் ஷாலினி இருவரின் புகைப்படத்தைஷாலினின் தங்கை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் இருவரும் காதலிக்க ஆரம்பித்துஇன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற வகையில் 23 வருட பந்தம் என்ற ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார்.அஜித் அவரது மனைவியை முத்தமிடும் இந்த புகைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisment

அஜித் - ஷாலினி தம்பதியின் புகைப்படம் சமீபகாலமாக வெளியாகாத நிலையில் தற்போது இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அண்ணன் அண்ணி என்று நெகிழ்ச்சியாக கமெண்ட்ஸ்களைபதிவிட்டு வருகின்றனர்.

Shalini Ajithkumar ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe