அஜித் ஹைதராபாத்தில் இருந்து பைக்கில் சென்னை திரும்பியது உண்மையா...?

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துவருகின்ற நிலையில் கரோனா தொற்று காரணமாக வலிமை படப்பிடிப்பை முடித்த கையோடு நடிகர் அஜித் ஹைதராபாத்தில் இருந்து பைக்கிலேயே சென்னை வந்ததாகச் சமீபத்தில் செய்திகள் உலா வந்தன.

hfh

இந்நிலையில், டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னைக்கு பைக்கில் திரும்பியுள்ள அஜித்தின் பழைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு அஜித் மூன்று மாதங்களாக வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்து வருவதாகவும், ஜனவரி மாதம் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ளவில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ACTOR AJITHKUMAR ajith valimai
இதையும் படியுங்கள்
Subscribe