/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94_18.jpg)
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவந்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையிலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திவந்தது படக்குழு. ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்ய சமீபத்தில் 'வலிமை' படக்குழு ரஷ்யா பறந்தது.
தற்போது எஞ்சிய அந்த சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதையடுத்து, படக்குழு விரைவில் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித் ரஷ்யாவில் சில நாட்கள் தங்கியிருந்து ரஷ்யாவின் முக்கிய பகுதிகளுக்குப் பைக் பயணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக ரஷ்யாவில் உள்ள பிரபல பைக் ரேஸர்களுடன் அவர் கலந்தாலோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)