Skip to main content

“சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”- அஜித் தரப்பு மறுப்பு

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

உட்சநட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பவர். ஆனாலு, அவருடைய ரசிகர்களால் அஜித்துக்கு சமூக வலைதளத்தில் செல்வாக்கு அதிகாமாவே இருக்கிறது.
 

ajith kumar

 

 

இந்நிலையில் நேற்று மாலை நடிகர் அஜித்குமார் ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்று வலம் வந்தது. அதில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கையை பார்த்து அஜித் ரசிகர்கள் பலரும் உண்மை என நம்பி மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அஜித் தரப்பிலிருந்து அது பொய்யான அறிக்கை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.