Advertisment

"காணாதொரு வெளிச்சத்தில் எனை..." - ஓமனில் அஜித்

ajith in omen video viral on social media

நடிப்பதைத்தாண்டி பைக் பிரியராக இருக்கும் அஜித் அவ்வப்போது பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அஜித் தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகத்தெரிகிறது. அந்நாட்டில் அவர் இருக்கும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அஜித் பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டத்தயாராகிறார். அதை வீடியோ எடுத்த ரசிகர்அவர்அருகில் சென்று, "ஓகே தல சார்... டேக் கேர்..." எனச் சொல்லி மகிழ்கிறார். உடனே அவருக்கு கை கொடுத்துவிட்டுப் புறப்பட்டுச் செல்கிறார் அஜித். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் அடுத்த மாத தொடக்கத்தில் அபுதாபியில் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

கதாநாயகியாக த்ரிஷா, தமன்னா, ஹீமா குரேஷி பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது த்ரிஷாவை படக்குழு இறுதி செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

vidamuyarchi ACTOR AJITHKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe