அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை’ படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாக புதிய தகவல் தற்போது கசிந்துள்ளது. ஏற்கனவே ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வெற்றிபெற்றிருந்தாலும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த என்னை அறிந்தால் படம் போதிய வரவேற்பை பெற தவறி வசூலிலும் சற்று கோட்டை விட்டது. இந்த நஷ்டத்தை சரி செய்ய அஜித்தின் அடுத்த படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.எம் ரத்னம் ஷங்கர் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் உருவாக்கியுள்ள புதிய கதையில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.