Advertisment

"திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்" - புதிய துறையில் கால் பதித்த அஜித் - அறிக்கை வெளியீடு

ajith new venture as businessman AK Moto Ride

Advertisment

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். லைகா தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை நீரவ் ஷா மேற்கொள்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட சுற்றுப் பயணத்தை ‘அஜித் 62’ படத்தை முடித்துவிட்டுத்தொடர்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் படம் தாமதமாகி வருவதால் பயணத்தை இப்போதே தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்த உலக பயணத்தில் முதற்கட்ட பயணமாக இந்தியா, நேபாள், பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட பயணம் வருகிற நவம்பரில்தொடங்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜித்ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்றமோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்:'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)* என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன்என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Advertisment

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vidamuyarchi ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe