
பட அதிபர்கள் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிவைத்திருந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அடுத்து சென்னையிலும் வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும் படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார் என்று தகவல்களும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்று கூறப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.