Advertisment

வலிமை படத்தகவல் -அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்... 

ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர்எச். வினோத், இதற்கு முன்பு 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர். அவரின் கதை மற்றும் திரைக்கதைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அஜித்தை வைத்து ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியிருந்தாலும் அது ரீமேக் செய்யப்பட்டபடம் என்பதால், எச்.வினோத்தின் கதை மற்றும் திரைக்கதையில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

Advertisment

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு,கடந்த வருடம் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவலால்,படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்புகளைநடத்த அரசு அனுமதியளித்ததும், இப்படத்தின்படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது 'வலிமை'படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

Advertisment

இப்படத்தில் அஜித்போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ். என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவலை தற்போது அஜித் ரசிகர்கள், ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துகொண்டாடி வருகின்றனர்.

ACTOR AJITHKUMAR h.vinoth nerkonda parvai valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe