Advertisment

அஜித் படத் தயாரிப்பாளரின் கோரிக்கை - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

Advertisment

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அனைத்து இந்திய மக்களும் முதல் முறை வாக்காளர்களும் பிரதமர் மோடிக்கு ஓட்டுப்போட வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவி கணவரான இவர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களையும் தயாரித்திருந்தார். இதனிடையே உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் ஆகியபடங்களைத்தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் அவர், அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருப்பதுபலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கருத்துநாடாளுமன்ற மக்களவைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.

Narendra Modi ACTOR AJITHKUMAR Boney kapoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe