நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

thala 60

இந்நிலையில் கடந்த 1995ஆம் ஆண்டு அஜித் நடித்து வெளியான மைனர் மாப்பிள்ளை என்னும் படம் மீண்டும் 24 வருடங்கள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் திரையில் வெளியாக இருக்கிறது.

Advertisment

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1e37dac6-833a-4b07-9d55-dc126a21083f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_21.jpg" />

இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். 24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன் இயக்கம் செய்திருந்தார். அவரே `மைனர் மாப்பிள்ளை' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment