நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நயன்தாரா, யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்தாட்டை மையமாக வைத்து உருவாகிறது இப்படம். மெர்சல் படத்தை தொடர்ந்து மீண்டும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் விஜய்.

Advertisment

agalathey

சமீபத்தில் சிங்கப்பெண்ணே என்கிற இப்பட பாடல் இணையத்தில் லீக்காகி வைரலானது. இதனை தொடர்ந்து படக்குழு அப்பாடலை 23ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தது. 23ஆம் தேதி இரவு 10 மணிக்கு லிரிக்கல் வீடியோ போல் சாதரனமாக இல்லாமல், ஒரு ஆல்பம் போல் ரஹ்மானை பாட வைத்து இப்பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியாகி உடனடியாக லைக்ஸ்களும், வியூஸ்களும் எகிறின. குறைந்த மணிநேரத்திலேயே 500 லைக்ஸ்கள். 40 மணிநேரத்திற்குள் 5 மில்லியன் வியூஸ்கள் என்று சாதனைகள் படைத்தது.

Advertisment

இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து அகலாதே என்ற பாடல் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியானது. யுவன் இசையில் வெளியான இந்த மெலடி பாடல் ரசிகர்களுக்கு பிடித்தமாக இருந்ததால் முதல் 24 மணிநேரத்திற்குள் 5 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை பார்த்துள்ளனர். இது பிகில் படத்திலுள்ள சிங்கப்பெண்ணே படத்தின் பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.