Advertisment

கிளாஸ் ரூமில் அஜித்...இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்

ajith

அஜித் சினிமாவை தவிர்த்து கார்பந்தயம், ஏரோ மாடலிங், போட்டோகிராபி போன்றவற்றில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது ஸ்ட்ரைக் காரணமாக திரையுலகம் முடங்கியுள்ளதையொட்டி கிடைத்த ஓய்வு நேரத்தை அஜித் ஏரோ மாடலிங்கில் கவனத்தை திருப்பி பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்ற அஜித் அங்கு ஏரோ மாடலிங் துறையை சேர்ந்த மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்திருக்கிறார். அப்போது மாணவர்களுடன் நேரத்தை கழித்த அவர் தனக்கு ஆலோசனை நடத்திய மாணவர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுத்தார். அதில் ஒரு மாணவன் இந்த ஆச்சரியப்படுத்தும் சந்திப்பை பற்றி பேசுகையில்..."அவரை பார்க்க கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் தளபதி (விஜய்) ரசிகராகிய நான் அவரை பார்த்தது, பேசியது, கை கொடுத்தது என ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்கிறேன். இரவு 12 மணி மேல் ஆனதால் அவர் ரொம்ப டயர்டாக இருந்தும் எங்களோடு போட்டோ எடுக்க ஒப்புக்கொண்டார். அப்போதுநாங்கள் உங்களை பார்க்க 12 மணி நேரம் காத்திருக்கிறோம் என்று கூற, அதற்கு அஜித் "மன்னித்து விடுங்கள் பா ...உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்" எனக் கூறி மகிழ்வித்தார்" என்றார்.

Advertisment

ajith

sathyajothifilms siva viswasam ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe