Skip to main content

சென்னை வந்து அஜித்தை இல்லத்தில் சந்தித்த போனிகபூர்... விரைவில் புதிய அறிவிப்பு !

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
ajith

 

 

 

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும், சதுரங்கவேட்டை, தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்தி பரவி அது பிங்க் படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. பின்னர் இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் அல்ல என்று வினோத் சமூக வலைத்தள பக்கத்தில் மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. பிறகு எச்.வினோத் இந்த தகவலை மறுத்து தான் எந்த ஒரு வலைத்தளத்திலும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் போனிகபூர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்து அஜித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பட வேலைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தற்போது புதிய தகவல் கசிந்துள்ளது. மேலும் இதற்கிடையே 'விஸ்வாசம்' படம் முடிவடைந்த நிலையில் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அஜித்குமார் நேற்று கோவா புறப்பட்டுச் சென்றார். சென்னை திரும்பியதும் போனிகபூர் தயாரிக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

UK வில் AK; ட்ரெண்டாகும் பைக் ட்ரிப் புகைப்படங்கள்!

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்  நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகப் படக்குழு குஜராத்தில் மையமிட்டுள்ளனர்.

 

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார் அங்கு பைக் ரேசர் குழுவுடன் பைக் ரைட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில்  யூரோப் டனல் ரயிலில் அஜித் தனது பைக் ரைட் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் #AKUKTRIP என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்டசெய்து வருகின்றனர்.

 

 

Next Story

"பில்லா 2 படத்தில் அஜித்துடன் நடிக்க இருந்தேன், ஆனால்..." - ஹுமா குரேஷி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

actress huma qureshi  talk about valimai movie

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24  (நாளை) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

 

இந்நிலையில் வலிமை படத்தில் நடித்தது குறித்து ஹுமா குரேஷி கூறுகையில், "வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம்  எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், ஆக்சன் பிளாக் என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆனால் வினோத் சார் பெண் கதாபாத்திரங்களை கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக, எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

 

மேலும் நடிகர் அஜித் பற்றி அவர் கூறுகையில், ஏற்கனவே “பில்லா 2 படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்தது. வலிமை படத்தில் அஜித் சாருடன் இணைந்து நான்  நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்றார்.