அடுத்த அட்வென்ச்சருக்கு தயாராகும் அஜித்!

bfndfnd

எச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவந்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையிலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திவந்தது படக்குழு. ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்ய சமீபத்தில் 'வலிமை' படக்குழு ரஷ்யா பறந்தது.

தற்போது எஞ்சிய அந்த சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதையடுத்து, படக்குழு இந்தியா திரும்பியுள்ளது. இந்தியா வந்த நடிகர் அஜித், அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணம் செய்துவருகிறார். மேலும், சமீபத்தில் தாஜ்மகாலுக்குச் சென்ற அவர், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகிவந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் 7 கண்டங்கள் உட்பட 64 நாடுகளைப் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாரல் யஸார்லூவை டெல்லியில் சந்தித்து அவருடைய பயண அனுபவங்களைக் கேட்டறிந்தார். மேலும், எதிர்காலத்தில் தனது மோட்டார் சைக்கிளில்உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல அவருடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

ACTOR AJITHKUMAR valimai
இதையும் படியுங்கள்
Subscribe