Advertisment

படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸை சந்தித்த அஜித்!

ajit

Advertisment

நடிகர் அஜித்பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த பல படங்களின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.

பிங்க் ரீமேக்கை தமிழில் இயக்குபவர் சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்தான் இதை தயாரிக்கிறார்.

இந்நிலையில் பிங்க் ரீமேக் நடிபெறும் படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலேயே பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் படப்பிடிப்பு மற்றும் மாராக்கர்: அரபிக்கடலின்டே சிம்மம் என்னும் மலையாள படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Advertisment

அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு, சாஹோ படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று, பிரபாஸுடன் நீண்ட நேரம் உரையாடி இருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷனையும் சந்தித்து உரையாடி இருக்கிறார்.அவர்கள் இருவரையும் சந்தித்த புகைப்படங்களில் அஜித், ப்ரியதர்ஷன் சந்தித்த புகைப்படம் தான்அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ajith kumar prabhas saaho
இதையும் படியுங்கள்
Subscribe