valimai

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. கரோனா நெருக்கடி நிலை தளர்வுக்குப் பிறகு, வலிமை படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிக்கும் தளபதி 65 படம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரிடம் வலிமை படம் தொடர்பாக ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, நடிகர் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த அறிக்கையில், "வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவிற்கு மதிப்பு தரவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.