/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/179_10.jpg)
மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.
மேலும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் தன் டப்பிங் பணியை முடித்துள்ளார். இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப்பாடியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அஜித்தின் புகைப்படம் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஒரு ரசிகர் அஜித்திற்கு சாய்பாபா படத்தை பரிசாக வழங்குவது போல் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அஜித் ஒரு தீவிர சாய்பாபா பக்தர் என கோலிவுட்டில் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அதன் காரணமாக இந்த ரசிகர் சாய்பாபா படத்தை வழங்கியிருக்கலாம் எனப் பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)