'வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் சில நண்பர்களுடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பயணித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
அஜித்தின் லடாக் பைக் டிரிப்பின் போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் தினசரி வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட கார்கில் போர் நினைவிடத்தில் அஜித் மரியாதை செய்த புகைப்படம் வெளியானது. அந்த வகையில் அஜித் தற்போது புத்தவிகாருக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
Exclusive Video. #Ajith sir ❤️#AjithKumar#AK#AK61pic.twitter.com/MHJQ26cL4F
— Ajith Network (@AjithNetwork) September 12, 2022