
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் தயாரிப்பில் பிங்க் பட ரிமேக்கில் நடிக்க இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத்தான் இதை இயக்குகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. அஜித்திற்கான ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஒரே செடுலில் நடித்து முடிக்க இருக்கிறாராம். இந்த படம் மே-1ஆம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இதனை அடுத்து நடிகர் அஜித் வேறு தயாரிப்பு நிறுவனத்துடனும், வேறு இயக்குனருடனும் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் தவறான செய்திகள் வளம் வந்துகொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அஜித்தின் பிஆர்ஒ சுரேஷ் சந்திரா, நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்து பல தவறான செய்திகள் வெளிவருகிறது. பொனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் வருகிற 2020 ஆம் ஆண்டு வரை இரண்டு படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிங்க் ரிமேக்கை அடுத்து இயக்குனர் எச்.வினோத்துக்கே அடுத்த வாய்ப்பையும் நடிகர் அஜித் தருவார் என்று தகவல்கள் சொல்லப்படுகிறது. இது முழுமையாக எச்.வினோத்தின் கதையில் உருவாக்கப்படும் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.