Advertisment

அஜித், விஜய் சேதுபதி, அனுஷ்கா ஷர்மா காம்போ...கபிலன் வைரமுத்து எழுதும் கதை! 

ajith

Advertisment

பாடலாசிரியர் வைரமுத்துவின் இரண்டாவது மகனான கபிலன் வைரமுத்து திரைப்படங்களுக்கு பாடல்களும், வசனங்களும் எழுதுவது மட்டுமின்றி நாவல்களையும் எழுதுகிறார். இதுவரை பூமராங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி ஆகிய 3 நாவல்களை எழுதியிருக்கிறார். தற்போது நான்காவது புதிய நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருடைய மூன்றாவது நாவல் மெய்நிகரி, கவண் என்ற தலைப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தை கே.வி. ஆனந்த் இயக்க, விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் செம ஹிட் அடித்தது.

அவருடைய நான்காவது நாவல் குறித்து தனியார் இணைய ஊடகத்திற்கு பேட்டியளித்தபோது, நாவல் எழுதும் பணி தொடங்கப்பட்டு ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. இந்தக் கதையில் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அந்தப் பாத்திரங்களுக்கு நடிகர் அஜித், விஜய்சேதுபதி, அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ajithkumar Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe