ajith kumar

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தல என்று அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவர் சினிமாத்துறையை தாண்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர். இந்நிலையில், தக்‌ஷா என்னும் பொறியியல் டீமுடன் இணைந்து நடிகர் அஜித் குமார் ஒரு புராஜெக்ட்டில் இருக்கிறார். இந்த டீம் இந்திய அளவில் பரிசுகளையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

எம்.ஐ.டி ஏரோநாட்டிகல் மாணவர்கள் ட்ரோன் குறித்து ஒரு புரோஜெக்ட்டை செய்து வருகின்றனர். இந்த புரோஜெக்ட் குழு பெயர்தான் தக்‌ஷா. இக்குழுவிற்குதான் நடிகர் அஜித்குமார் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியில் கலந்துகொண்ட தக்‌ஷா குழு சர்வதேச அளவில் 2ஆம் இடம் பிடித்தது. அஜித் வழி நடத்திய அணிக்குப் பரிசு கிடைத்ததை அவரின் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Advertisment

அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அவர் தக்‌ஷா குழுவின் ட்ரோன் புரோஜெக்ட் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு எம்.ஐ.டி வளாகத்தில் தக்‌ஷா குழுவை சந்தித்தார். அப்போது மாணவர்களுடன் எடுத்தகொண்ட புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், தக்‌ஷா குழு தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார் அஜித். அங்கு வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள், ‘எங்க தல அறிவியல் துறையிலும் கெத்து’என்று பெருமையாக கூறிக்கொள்கின்றனர்.