Ajith kumar travel route map

அஜித் - எச் வினோத் - போனிகபூர் ஆகியோரது கூட்டணியில்மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் ஏகே61. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் சில நண்பர்களுடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

Advertisment

இதனிடையே நடிகர் அஜித் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சமீபகாலமாக அஜித்தின் பைக் பயண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில் அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பைக் பயணத்திற்கான ரூட் மேப்யை வெளியிட்டுள்ளார். அதில் செப்டம்பர் மாதத்தில் கார்கில், லடாக். சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் முடிவில் இந்தியா முழுவதும் சுற்றி வரும் வகையில் அந்த மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment