நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான தொடக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்குமார் ரைஃபில் ஷூட்டிங் போட்டிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

Advertisment

ajithkumar

அண்மையில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. போட்டியின் அடுத்த கட்டம் டெல்லியில் நடைபெறுகிறது அதில் விளையாடவும் அஜித் தேர்வாகியிருந்தார்.

Advertisment

இதனையடுத்து இந்த மாதம் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இந்த போட்டியில் மூன்று பிரிவுகளில் கலந்துகொண்ட அஜித், இரண்டு பிரிவுகளில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டி தொடர்பான பட்டியலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12ஆம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9ஆவது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8ஆவது இடத்தையும் பிடித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment