Advertisment

மருத்துவமனையில் ஷாலினி; அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித் குமார்!

Ajith Kumar from Azerbaijan

தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இருந்து தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்டது.

Advertisment

இதனையடுத்து, சில நாட்கள் தொடங்காமல் இருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அந்த வகையில், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜுன் 30ஆம் தேதி வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்த நிலையில், அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினிக்கு மைனர் ஆப்ரேஷன் நடந்துள்ளது. இதனையடுத்து, நேற்று (02-07-24) அஜித் குமார் அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு வந்தார். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மீண்டும் அஜித் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shalini Ajithkumar ACTOR AJITHKUMAR ajith kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe