ajith kumar and Richard Rishi photos goes viral

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தனது நடிப்பாலும், திறமையாலும் கட்டுக்கடங்காரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். சினிமாவில் இவர்பின்பற்றும் பாணி மற்ற நடிகர்களிடம் இருந்து இவரை சற்று மாறுபட்டேநிறுத்தியிருக்கிறது. பப்ளிசிட்டியை விரும்பாத நடிகர் அஜித் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது இல்லை, குறிப்பாக படத்தின் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா என எதிலும் அவர் கலந்து கொள்வதுஇல்லை. அதனால் ரசிகர்களுக்கும் அவரை பார்ப்பதற்கானசந்தர்ப்பம்பெரியளவில் அமைவதில்லை. அதனால் தான் என்னவோ திரையில் அஜித்தை பார்த்த மறுகணமேஅது வெற்றி படமோ, இல்லை தோல்வி படமோஏதுவாக இருந்தாலும்ரசிகர்கள்அவரை கொண்டாடித்தீர்த்துவிடுகின்றனர்.

சினிமாவில் இருக்கும் திரை பிரபலங்கள் பலர் தங்களது உறவுகளை திரைத்துறையில் வளர்ப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித் இதிலும்மாறுபட்டேநிற்கிறார். அஜித் குடும்பத்தில் இருந்து ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் தம்பிரிஷி ரிச்சர்ட்ஆகிய இருவரும்நடிகர்களாகஅறிமுகமானார்கள். ஆனால் இவர்களைதிரைத்துறையில் பிரபலப்படுத்துவதற்கானஎந்த விளம்பரங்களையும் அஜித் செய்ததில்லை . இதிலும்ஷாலினின்தம்பி ரிச்சர்ட்ரிஷி சர்ச்சைக்குரிய படங்களான'திரௌபதி' மற்றும் 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இந்த இரண்டு படங்களையும்ஷாலினி அஜித் திரையரங்குகளில் பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அந்த இருபடங்களுக்கும் விளம்பரமாகஅமைந்தது. ஆனால் அஜித் இந்த இரண்டு படங்களையும் நேரடியாக திரையரங்கிற்கு வந்து பார்த்ததாக எந்த தகவலும் வெளிவந்ததில்லை. ஏன் இப்படம் குறித்தோரிஷி ரிச்சர்ட் குறித்தோ எந்தவிதமான கருத்துக்களையும் இதுவரை அஜித் பேசியது கிடையாது.

இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் மைத்துனர் ரிச்சர்ட்ரிஷி இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தன்னுடைய மகன் ஆத்விக் பிறந்தநாளைஅஜித் தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அஜித் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் ரிச்சர்ட்ரிஷியும்கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள்குவிந்து வருகின்றன.