Advertisment

'ஏகே 61' ரிலீஸ் அப்டேட்; கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

ajith kumar ak61 release diwali

Advertisment

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாககூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புதொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜான் கொக்கின் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பணிகள் சரியாக நடைபெற்றால் ஏகே 61 படம் தீபாவளி அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ACTOR AJITHKUMAR AK61 Boney kapoor manju warrier
இதையும் படியுங்கள்
Subscribe