Skip to main content

'ஏகே 61' ரிலீஸ் அப்டேட்; கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

ajith kumar ak61 release diwali

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்  சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு  போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்  நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜான் கொக்கின் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பணிகள் சரியாக நடைபெற்றால் ஏகே 61 படம் தீபாவளி அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.