ajith kumar

ரசிகர்களுடன் நடிகர் அஜித் புகைப்படம் எடுப்பதற்காக சாலையில் அமர்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் பல வருடங்களாக ஊடகங்களிலும், பொதுமேடைகளிலும் என்று எந்த வித விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். அதேபோலதான் அவருடைய ரசிகர்களையும் அவ்வளவாக சந்திக்காமல் இருக்கிறார். ஆனால், என்றாவது ஒருநாள் அவர் வெளியில் செல்லும்போது அவரது ரசிகர்களின் அன்பு தொல்லையில் சிக்கிக்கொள்கிறார். கடந்த வாரம் கூட துப்பாக்கி சூடு பயிற்சி சென்று அஜித் பயிற்சி எடுத்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. அப்போது அவரது ரசிகர்களை பார்க்ககூட இல்லை என்று பலர் விமர்சித்தனர்.

Advertisment

இந்நிலையில், அஜித் வெளியில் எங்கோ செல்லும்போது அவரை பார்த்த அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்துவிட்டனர். பின்னர், அஜித்திடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட, அஜித் சற்றும் யோசிக்காமல் கூட்டமாக ரசிகர்கள் இருப்பதால் சாலையில் அமர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்தார். இதனையடுத்து அஜித் தனது ரசிகர்களுடன் சாலையில் அமர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment