style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஜித் தற்போது 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்து வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும், மற்றும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குவதாகவும் தகவல் பரவி வேகமாக வைரலாகி வருகின்றது.