Advertisment

விஸ்வாசம் படப்பிடிப்பில் குரூப் டான்சர் மரணம்..! உடலை அடக்கம் செய்ய அஜித் செய்த உதவி

ajith

சத்யஜோதி நிறுவனம் சார்பில் ஆர்.தியாகராஜன் தயாரித்து, அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிவரும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக்கொண்டிரும் வேளையில் அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று சரவணன் என்ற குரூப் டான்ஸர் தனது உடலில் ஒரு அசாதாரண சூழலை உணர்ந்திருக்கிறார். வாந்தி எடுத்து உடல் நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். ஈசிஜி உள்ளிட்ட அனைத்து டெஸ்ட்களும் எடுக்கும் போதே, அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதற்கிடையே அவருக்கு டெஸ்ட் எடுக்கும் போது, அஜித்துக்கு தகவல் தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன் பிரேதப் பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார். மேலும், குடும்பத்தினரிடமும் பேசி உடலை புனேவிலிருந்து மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வரை முழுக்க தொலைபேசி வாயிலாக எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். அருகில் இருந்த டான்ஸர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார். இவ்வளவு பெரிய நடிகர் இந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கிறாரே என்று குரூப் டான்ஸர்கள் மிகவும் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

ajith ajithkumar thala viswasam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe