Skip to main content

முன்னதாகவே தொடங்கிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
ajith good bad ugly updat

அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மார்ச் மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு பைக் பயணத்தில் ஈடுப்பட்டார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு கடந்த மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்தின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

இப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் குட், பேட், அக்லி என்ற தலைப்பில் உருவாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பொங்கல் 2025ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பின்பு சிம்ரன் மற்றும் மீனா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அஜித் ஒரே கெட்டப்பில் மூன்று முகமாபாவனைகளுடன் தோன்றுகிறார். மேலும் கலர்ஃபுல்லாக போஸ்டர் அமைந்துள்ளது. அதீடு படப்பிடிப்பும் தொடங்கி நடந்துவருவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்பட அறிவிப்பில் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் முன்னதாக மே மாதமே படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து அப்டேட் வெளியாகி வருகிறது. ஆனால் இப்படத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட விடாமுயற்சி படம் எந்த நிலையில் உள்ளதென படக்குழு அறிவிக்கவில்லை. விரைவில் அது குறித்து அப்டேட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“அஜித்தைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்...” - குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீபிரசாத்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
devi sri prasad gaves update about the good bad ugly movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இதற்கிடையில், மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் நடித்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்து வந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்து தேவி ஸ்ரீபிரசாத் அண்மையில் பேசியிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “குட் பேட் அக்லி படத்தில் ஒரு பாட்டு பண்ணியிருக்கோம். அந்தப் பாடலுக்கு அஜித், பயங்கரமா டான்ஸ் ஆடி இருக்காரு. அத பார்த்து நான் உண்மையிலே மிரண்டுட்டேன்” எனக் கூறினார். இந்தப் படம் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என ஏற்கெனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

மருத்துவமனையில் ஷாலினி; அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித் குமார்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Ajith Kumar from Azerbaijan

தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இருந்து தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, சில நாட்கள் தொடங்காமல் இருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அந்த வகையில், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜுன் 30ஆம் தேதி வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினிக்கு மைனர் ஆப்ரேஷன் நடந்துள்ளது. இதனையடுத்து, நேற்று (02-07-24) அஜித் குமார் அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு வந்தார். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மீண்டும் அஜித் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.