/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/303_26.jpg)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் உடல் எடை குறைத்து இளமையாக இருந்தார். அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த பிப்ரவரியில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து அவரது கதாபாத்திர வீடியோவை படக்குழு. பின்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது. அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) மற்றும் ‘காட் ப்ளஸ் யூ’(God Bless U) பாடல்கள் லிரிக் வீடியோவுடன் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர். வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியை மேல தாளத்துடன், பேனர் வைத்தும், கேக் வெட்டியும் படத்தை கொண்டாட திட்டமிட்டுள்ள ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் தற்போது அதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலியில் ஒரு திரையரங்க வளாகத்தில் 250 அடிக்கும் மேற்பட்ட உயரமுள்ள பிரம்மாண்ட கட்-அவுட் வைக்கும் பணிகள் நடைபெற்றது. அது முழுமையடையாத நிலையில் பணியின் போது திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அருகில் இருந்த ரசிகர்கள் பதறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)