விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து நடிகர் அஜித், ஹெச். வினோத் இயக்கத்தில்‘நேர்கொண்ட பார்வை’என்ற படத்தில் நடித்தார். அது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அஜித்தின் படங்கள் வழக்கமாக ஆந்திராவில்தான் ஷூட்டிங் எடுக்கப்படும் அதுபோல இப்படமும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் குறைவான நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டது.

yuvan

Advertisment

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே அஜித்துடன் இருபது நாட்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் அஜித்தின் அடுத்த பிளான் என்ன என்று ரங்கராஜ் பாண்டே தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை போலவே மற்றொரு விஷயமும் இந்த படம் தொடர்பாக வைரலாகி வருகிறது. அது என்ன என்றால் ஹிந்தி பிங்க் படத்தின் கதாநாயகனான அமிதாப் பச்சன் அந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பார். அதை போலவே இந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் யுவன் இசையில் பாடுகிறார் என்ற தகவல் வைரலானது. இதன் பின், இதுகுறித்து யுவன் தரப்பிலிருந்து அஜித் பாடவில்லை என்று மறுப்பளிக்கப்பட்டுள்ளது.