விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் இது. முதன் முறையாக இயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்குகிறார்.

Advertisment

mgr

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மூன்று கட்ட வேலைகளாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="fadd71c5-0e11-4c6d-9aae-b9a05ff4890d" height="134" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105.png" width="392" />

மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளான அன்று நேர்கொண்ட பார்வை படத்தின் டீஸர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரவில்லை. இந்நிலையில் அடுத்து அஜித்குமார் எந்த படத்தில் நடிக்க போகிறார், எந்த இயக்குனருடன் நடிக்க போகிறார் என்று பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த தகவல்களில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான அன்பே வா படத்தை அஜித் ரீமேக் செய்கிறார் என்ற ஒன்று பரவுகிறது. இதுகுறித்து அஜித் தரப்பில் எந்த அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment