Ajith

Advertisment

'விவேகம்' படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், மேலும் அஜித் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடல் பாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்ததனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தகவல் உண்மை இல்லை, இப்படத்தில் அஜித் பாடல் எதுவும் பாட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.