Advertisment

ஷாலினியுடன் கலந்துகொண்ட ரிசப்சன்; அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

Ajith Gift to shyam reception

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அஜித் உடனான நட்பு பற்றியும்அவரது திருமண விழாவில் அஜித் கலந்துகொண்டது பற்றியும் நாம் கேட்ட போது அவர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள்பின்வருமாறு...

Advertisment

நான் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான படம் 12பி. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அஜித் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதற்கு நன்றி சொல்லலாம் என்று அவரைதொடர்பு கொண்டு பேசி நேரில் சந்திக்க ஏவிஎம் ஸ்டூடியோ போனேன். ஹே,ஷாம்..குட்.. நல்லா நடிச்சிருந்த.முதல் படம் மாதிரியே தெரியல. ஒரு பத்து படம் நடிச்சிருந்த மாதிரி சூப்பரா நடிச்சிருந்த என்றார். அந்த சமயத்தில் அந்தப் பாராட்டு எனக்கு மிகப்பெரியதாய் இருந்தது.

Advertisment

கல்யாணப் பத்திரிக்கை கொண்டு போய்க் கொடுத்தேன். என்ன அதுக்குள்ள? என்றார். ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வருவதைச் சொல்லியதும் வாழ்த்துச் சொன்னவர் வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார். அப்போது எனக்கு ஒரு புதிய போன் அன்பளிப்பா கொடுத்தார். இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

ACTOR AJITHKUMAR shyam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe