Skip to main content

ஷாலினியுடன் கலந்துகொண்ட ரிசப்சன்; அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

Ajith Gift to shyam reception

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அஜித் உடனான நட்பு பற்றியும் அவரது திருமண விழாவில் அஜித் கலந்துகொண்டது பற்றியும் நாம் கேட்ட போது அவர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு...

 

நான் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான படம் 12பி. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அஜித் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதற்கு நன்றி சொல்லலாம் என்று அவரை தொடர்பு கொண்டு பேசி நேரில் சந்திக்க ஏவிஎம் ஸ்டூடியோ போனேன். ஹே, ஷாம்.. குட்.. நல்லா நடிச்சிருந்த. முதல் படம் மாதிரியே தெரியல. ஒரு பத்து படம் நடிச்சிருந்த மாதிரி சூப்பரா நடிச்சிருந்த என்றார். அந்த சமயத்தில் அந்தப் பாராட்டு எனக்கு மிகப்பெரியதாய் இருந்தது.

 

கல்யாணப் பத்திரிக்கை கொண்டு போய்க் கொடுத்தேன். என்ன அதுக்குள்ள? என்றார். ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வருவதைச் சொல்லியதும் வாழ்த்துச் சொன்னவர் வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார். அப்போது எனக்கு ஒரு புதிய போன் அன்பளிப்பா கொடுத்தார். இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவமனையில் ஷாலினி; அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித் குமார்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Ajith Kumar from Azerbaijan

தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இருந்து தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, சில நாட்கள் தொடங்காமல் இருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அந்த வகையில், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜுன் 30ஆம் தேதி வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினிக்கு மைனர் ஆப்ரேஷன் நடந்துள்ளது. இதனையடுத்து, நேற்று (02-07-24) அஜித் குமார் அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு வந்தார். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மீண்டும் அஜித் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'Good Bad Ugly' second look poster released!

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்துவந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று (27-06-24) மாலை 6:40 வெளியாகியுள்ளது. இந்த பதிவை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவித்து, ‘God Bless u mamae' என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.