style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக நடிகர் அஜித் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அவரை வித விதமாக போட்டோ எடுத்துள்ளார். பின்பு அந்த புகைப்படங்களை ஆல்பமாக உருவாக்கி அவருக்கு பரிசளித்து நயன்தாராவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இதை கண்டு நயன்தாரா நெகிழ்ந்து போனதாகவும் கூறப்படுகிறது. எப்போதும் தனது சக நடிகர்களுடன் இயல்பாக பழகும் பழக்கம் கொண்ட அஜித் இதற்கு முன்னதாக 'வீரம்' படத்தில் நடித்த அப்புக்குட்டியையும், 'வேதாளம்' படத்தில் ஸ்ருதி ஹாசனையும் இதேபோல் போட்டோஷூட் வைத்து புகைப்படம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">