
இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க ஸ்பெயின் அரசின் அனுமதிக்காகப் படக்குழு தற்போது காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
